என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி- சேலை
    X

    தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை பொருட்களை மேயர் சண் ராமநாதன் வழங்கினார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி- சேலை

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது.
    • மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை, வாளி உள்பட வழங்கினார்‌.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சௌராஷ்டிரா மேல ராஜவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். முன்னாள் சௌராஷ்டிர சபை தலைவர்கள் சுப்பராமன், ராமச்சந்திரன், கோவிந்தராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை, வாளி உள்பட பல்வேறு வகையான பொருட்களை வழங்கி பாராட்டினார் ‌‌.

    இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூய்மை பணவர்களுக்கான உதவிப் பொருட்கள் அனைத்தையும் மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தனது சொந்த நிதியில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×