என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கால்நடை மருத்துவ முகாம்
- 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றன.
- முகாம்கான ஏற்பாடுகளை கால்நடை துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டைஒன்றியம், விழிதியூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடை மருத்து வம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழிதியூர் ஊராட்சிமன்ற தலைவர் கலையரசி கோவிந்தராஜன் தலைமை வகித்தார். மெலட்டூர் கால்நடை உதவி இயக்குனர் மணிச்சந்தர், திருக்கருகாவூர் கால்நடை மருத்துவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கால்நடை மருத்துவர்கள் கனகா தேவி, ரகுநாத், ஷோபன் ராஜ், கால்நடை ஆய்வாளர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் முகாமில் விழிதியூர் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 100 க்கும் மேற்ப ட்ட கால்நடைகள்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றன.
முகாம்கான ஏற்பாடுகளை கால்நடை துறையினர் மற்றும் ஊராட்சிமன்ற நிர்வாகிகள் செய்து இருந்தனர்.