என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்
- ஆடுகள், மாடுகள், நாய்களுக்கு மருத்துவ சிகிச்சை.
- கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஊசி போடுதல், மடிவீக்க மருந்து முதலியவை வழங்கப்பட்டது.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் பேரளத்தை சுற்றியுள்ள ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அந்தப் பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்வதுடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி சிறப்பு முகாம் என்பது நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக இஞ்சிக்குடி என்கின்ற கிராமத்தை தேர்ந்தெடுத்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
பின்பு அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்பகுதியில் உள்ள மாடுகள் ஆடுகள் நாய் மருத்துவ சிகிச்சை நடைபெற்றது. இந்த முகாமில் நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவர்கள் மாடுகள் வளர்க்கும் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஊசி போடுதல், மடிவீக்க நோய்களுக்கான மருந்து, தீவனபுல், தாதுஉப்பு கலவை முதலிவை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திருவாரூர் மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம், பேரளம் பேரூராட்சி தலைவர் கீதா நாகராஜன், நாட்டுநல பணிதிட்ட அலுவலர் பாரி, பேரளம் பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன், இஞ்சிக்குடி பள்ளி தலைமை ஆசிரியர் காசிராஜா மற்றும் 20க்கும் மேற்ப்பட்ட நாட்டுநலபணிதிட்ட மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.