என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ராகுல் காந்திக்கு விஜய் வசந்த் பிறந்தநாள் வாழ்த்து
Byமாலை மலர்19 Jun 2022 3:12 PM IST
- பல்வேறு கட்சித் தலைவர்கள் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- ராகுல் காந்தி கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்
கன்னியாகுமரி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இன்று 52-வது பிறந்த நாள். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்பட பல தரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-
கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தீய சக்திகளை முறியடித்து மக்களை பாதுகாக்கும் முயற்சியில் வெற்றியினை காண இந்நாளில் மனமார வாழ்த்துகிறேன்.
அதற்கு தேவையான ஆரோக்கியமும் பலமும் அளிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
X