என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பந்தலூர் அருகே தரைப்பாலம் இடிந்து விழுந்ததால் கிராம மக்கள் தவிப்பு பந்தலூர் அருகே தரைப்பாலம் இடிந்து விழுந்ததால் கிராம மக்கள் தவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/05/05/1876560-ootybridge.webp)
பந்தலூர் அருகே தரைப்பாலம் இடிந்து விழுந்ததால் கிராம மக்கள் தவிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கன மழையால் தரைப்பாலம் உடைந்தது
- மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி,
பந்தலூர் அருகே உள்ள கூவமூலா பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் கன மழையால் உடைந்தது. இதனால் சுற்றுவட்டார மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு கன மழை பெய்தது. இதனையடுத்து அய்யன்கொல்லி, பகுதியில் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் கூவமூலா அருகே செட்டிவயல் பகுதியில் தரைபாலம் தண்ணீரில் அடித்து சென்றது. இதனால் உப்பட்டி மற்றும் பந்தலூர் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர செட்டி வயல் பகுதியில் 180 குடும்பங்கள் இந்த பாலத்தின் வழியேசெல்ல வேண்டும். இந்த பகுதியில் பாலம் உடைந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.