என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பிளஸ்-1 தேர்வு முடிவில் மாநில அளவில் 2-ம் இடம்
Byமாலை மலர்27 Jun 2022 1:25 PM IST
- பிளஸ்-1 தேர்வு முடிவில் மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளது.
- மாணவர்கள் 92.54 சதவீதமும், மாணவிகள் 98.10 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர்
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 2-ம் பெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 23 ஆயிரத்து 357 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 22 ஆயிரத்து 292 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.54 சதவீதமும், மாணவிகள் 98.10 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 95.44 ஆகும்.
மாநில அளவில் பெரம்பலூர் முதலிடமும், விருதுநகர் 2-ம் இடமும், மதுரை 3-ம் இடமும் பெற்றுள்ளது.
Next Story
×
X