என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கல்லூரி மாணவி-மருந்துகடை ஊழியர் உள்பட 3 பேர் மாயம் கல்லூரி மாணவி-மருந்துகடை ஊழியர் உள்பட 3 பேர் மாயம்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/04/1960477-vnr-05.webp)
கல்லூரி மாணவி-மருந்துகடை ஊழியர் உள்பட 3 பேர் மாயம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கல்லூரி மாணவி-மருந்துகடை ஊழியர் உள்பட 3 பேர் மாயமாகினர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மகள் மாரிசெல்வி (வயது 22). இவர் நெல்லை அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர் எப்பொதும் செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த மாரிசெல்வி திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதைத் தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் காளிதாஸ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருந்துகடை ஊழியர்
விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் பிரகாஷ் ராஜ் (26) மருந்தாளுனர் படிப்பு முடித்துவிட்டு சூலக்கரையில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தனது கல்வி சான்றிதழ்களை புதுப்பிப்பதற்காக கோவை செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.
பின்னர் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் விசாரித்தபோது விரைவில் வந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவர் எங்கு சென்றார் என விசாரித்து கண்டுபிடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் பால்ராஜ் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் ஜவகர்ராஜ். இவரது மனைவி எலிசபெத் ராணி (40). தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் அங்கு செல்ல வில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதைத் தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு ஜவகர் ராஜ் ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான எலிசபெத் ராணியை தேடி வருகின்றனர்.