என் மலர்
உள்ளூர் செய்திகள்
மனைவி, மாமியாரை கொல்ல முயன்ற வாலிபர் மீது வழக்கு
- மனைவி, மாமியாரை கொல்ல முயன்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- தன்னை காப்பாற்றிக்கொள்வ–தற்காக முனீஸ்வரன் தனது கையை கத்தியால் கிழித் துக்கொண்டு நாடகம் ஆடி–யுள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அம்மன்கோவில்பட்டி கிரா–மத்தை சேர்ந்தவர் முனீஸ்வ–ரன் (வயது 34). இவரது மனைவி இசக்கியம்மாள் (30). கூலி வேலை பார்த்து வரும் முனீஸ்வரன், திரும–ணமான நாள் முதல் தின–மும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
2 குழந்தைகள் பிறந்த நிலையிலும் அவர் குடிப்ப–ழக்கத்தை மறக்கவில்லை. இதற்கிடையே தனது உற–வுக்கார பெண் ஒருவருடன் முனீஸ்வரனுக்கு ெதாடர்பு இருப்பது மனைவி இசக்கி–யம்மாளுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இத–னால் கணவன், மனைவிக்கி–டையே மேலும் பிரச்சினை முற்றியது.
இதையடுத்து இசக்கியம்மாள் குழந்தைகளை அழைத் துக்கொண்டு, கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். அவ்வப்போது முனீஸ்வரன் மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் சம்பவத் தன்று காலை மனைவி, பிள்ளைகளை பார்த்து தான் வாங்கிச்சென்ற பல–கா–ரங்களை கொடுத்து–விட்டு வந்தார். பின்னர் அதேநாளில் இரவு 11 மணிக்கு மீண்டும் அங்கு சென்றார். அப்போது மனைவி அவரை கண்டித் தார். இதில் ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன், உன்னையும், உன் தாய் கூடம்மாளையும் கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறி கத்தரிக்கோலால் அவர்களை குத்தி காயப்ப–டுத்தி உள்ளார்.
உடனே அங்கு சத்தம் கேட்டு ஊர்க்காரர்கள், அக்கம்பக்கத்தினர் திரண்ட–னர். இதையடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்வ–தற்காக முனீஸ்வரன் தனது கையை கத்தியால் கிழித் துக்கொண்டு நாடகம் ஆடி–யுள்ளார். இதனை அறிந்த அப்பகுதியினர் போலீசா–ருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த சிவகாசி கிழக்கு போலீசார், முனீஸ்வரன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.