என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமியை செல்போனில் படம் பிடித்த சம்பவத்தில் மோதல்

- சிறுமியை செல்போனில் படம் பிடித்த சம்பவத்தில் மோதல்; 7 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன். இவரது மனைவி மணி மேகலை(வயது29). சம்பவத்தன்று இவர்களது மகள் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்றிருக்கிறார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த அனுஷியா (28) மற்றும் மல்லிகா (62) ஆகிய இருவரும் சிறுமியை செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். தனது மகளை செல்போனில் படம் எடுத்தது குறித்து அனுஷியா வீட்டிற்கு சென்று மணி மேகலை கேட்டார்.
அப்போது இரு தரப்பின ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் மல்லிகா மற்றும் அனுசியா மீதும், மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் காசி அம்மாள், பழனி, நந்தினி, மணிமேகலை, தீபாஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.