என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர் சாவு
- மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
- சிவலிங்ககணேஷ் காரியா பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவரது மகன் தனசேகர பாண்டியன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கணேஷ் (18). இவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
நேற்று காரியாபட்டியில் உள்ள நண்பர்களை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிளில் 2 பேரும் புறப்பட்டு சென்றனர். தனசேகரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரியனேந்தல் பகுதியில் வந்தபோது முன்னால்சென்ற லாரியை முந்திசெல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே இருந்த தடுப்பில்மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த தனசேகர பாண்டி யன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவலிங்ககணேஷ் காரியா பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.