என் மலர்
உள்ளூர் செய்திகள்

காளீஸ்வரி கல்லூரி: திரைப்பட விழா
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் திரைப்பட விழா நடந்தது.
- ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா தலைமை தாங்கினார்.
சிவகாசி
சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறையின் நியோ ஐடோலா இலக்கிய மன்றம் சார்பில் திரைப்பட விழா நடந்தது. ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா தலைமை தாங்கினார்.இலக்கிய மன்றத் துணைத் தலைவரும், ஆங்கிலத்துறை, 3-ந் ஆண்டு மாணவருமான பிரதீப் வரவேற்றார். முதல் அமர்வாக உலக சினிமாவில் இருந்து சிறந்த காட்சிகள் திரையிடப்பட்டன. ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா தலைமையில் இந்த திரைப்படங்களின் சிறப்பம்சம் குறித்த கலந்தாய்வுகள் நடந்தன.
உலகத் திரைப்படங்களின் காட்சியமைப்பு, கதையம்சம், இயக்கம், நடிப்பாற்றல் மற்றும் இசை கோர்ப்பு பற்றி மாணவர்கள் கலந்துரையாடினர். திரையிடப்பட்ட காட்சிகளில் தங்களை கவர்ந்த காட்சிகளைப் பற்றி மாணவர்கள் பேசினர். இது மாணவர்களின் விமர்சனத் திறன் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்தது. இலக்கிய மன்ற மாணவர் தலைவரும், முதுகலை 2-ந் ஆண்டு மாணவியுமான மரியா கிரிஸ்டைனா நன்றி கூறினார்.