search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்
    X

    கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்

    • கூடுதல் வரதட்சணை கேட்டு அரசு பெண் ஊழியர் துன்புறுத்தினர்.
    • சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மார்டன் தெருவை சேர்ந்தவர் விக்டோரியா, அரசு பள்ளி ஊழியர். இவருக்கும், கல்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஜான்பிரிட்டோ விருதுநகர் மாஜிதிரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில் எனது கணவர் தொழில் செய்வதற்காக என்னிடம் பண உதவி கேட்டார். இதற்காக 3 தவணைகளில் வங்கியில் ரூ.23 லட்சம் வரை கடன் பெற்று கொடுத்தேன். ஆனால் அதனை செலவு செய்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறினார். மேலும் அவருக்கு வேறொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்தது. இதுகுறித்து கேட்டால் பணம் கொடுத்தால் என்னுடன் சேர்ந்து வாழ்வேன் என மிரட்டினார். இதற்கு அவரது பெற்றோர் கென்னடி-ஆகத்தம்மாள் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    தற்போது கூடுதலாக 9 பவுன் நகை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது பெற்றோர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ராணுவ வீரர்

    சாத்தூர் படந்தாலை சேர்ந்தவர் விமலாதேவி(27). இவருக்கும், வெம்பக் கோட்டை சங்கரபாண்டிய புரத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் கண்ணன் என்பவருக்கும் 2022-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் விமலாதேவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சுரேஷ் கண்ணன் மற்றும் சிலர் மீது சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×