search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    இளம்பெண்ணிடம் நகை பறிப்பு

    • மிளகாய் பொடியை தூவி இளம்பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி விட்டனர்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள சிறுவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் குருதேவியை (வயது 19) மதுரை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    அ.முக்குளம் அருகே புல்வாய்க்கரை மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது பின்னால் மோட்டர் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் நரிக்குடிக்கு எந்த வழியாக செல்ல வேண்டும்? என்று கேட்டனர்.

    இதற்கு கார்த்திக் நீங்கள் வந்த வழியாகவே செல்லுங்கள் என்று கூறினார். அப்போது மர்ம நபர்கள் திடீரென்று கையில் வைத்திருந்த மிளகாய்பொடியை கார்த்திக் மற்றும் குருதேவி மீது தூவினர்.

    இதில் நிலைகுலைந்த குருதேவியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி விட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    Next Story
    ×