என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரியல்எஸ்டேட் புரோக்கர் திடீர் சாவு
- ரியல்எஸ்டேட் புரோக்கர் திடீரென இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தர் பாலமுருகன்(45). இவருக்கு திருமணமாகவில்லை. வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி புரோக்கர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது அறையில் பேச்சு மூச்சில்லாமல் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலமுருகனின் சகோதரர் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story