என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![காவலரை தாக்கிய கடை ஊழியர் கைது காவலரை தாக்கிய கடை ஊழியர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/05/31/1890345-123.gif)
காவலரை தாக்கிய கடை ஊழியர் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- போக்குவரத்து தலைமை காவலரை தாக்கிய கடை ஊழியரை கைது செய்தனர்.
- ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் சாந்தரூபன்(வயது32). இவர் ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சங்கரன்கோவில் முக்குரோட்டில் வாகன ேசாதனையில் சாந்தரூபன் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தார். ேபாலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்ைல என விசாரித்தனர். அவரிடம் சாந்தரூபன் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர் போக்குவரத்து போலீசாரை அவதூறாக பேசி சாந்தரூபனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் வாலிபரை பிடித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்த பிரித்விராஜ்(26) என்பதும் எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.