என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறுவள மைய ஏதுவாளர்களுக்கான பயிற்சி
- குறுவள மைய ஏதுவாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
- இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரியின் உத்தரவுப்படி, வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நாளை (26-ந் தேதி) நடைபெற உள்ள குறுவளமையக் கூட்டத்தில் மாவட்ட ஏதுவாளர்களாக செயல்பட உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி கிருஷ்ணன்கோவிலில் நடந்தது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் ஆகியவை இணைந்து இந்த பயிற்சியை நடத்தியது. பாலையம்பட்டியில் உள்ள மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வெள்ளத்துரை தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் முன்னிலை வகித்தார். பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் மகாலிங்கம் வரவேற்றார்.
இதில் சிவகாசி கல்வி மாவட்டத்தின் கீழ் உள்ள சிவகாசி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஒன்றியங்களைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 237 பேர் கலந்து கொண்டனர். உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி, சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மருதக்காளை, கணேசுவரி, மெர்சி ஆகியோர் பேசினர். இ்ல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, ஜெயக்குமார் ஞானராஜ், ஆசிரியப் பயிற்றுநர்கள் முத்துராஜ், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளராக இளங்கோ, இணை ஒருங்கிணைப்பாளர்களாக மகாலிங்கம், சரவணகுமாரி ஆகியோர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரியின் உத்தரவுப்படி, வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.