என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருசாபிஷேக விழா

- ஜெய்மகா காளீஸ்வரி கோவிலின் 30-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.
- வருடாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சஞ்சீவி மலை கிழக்கு அடிவாரத்தில் உள்ள ஜெய்மகா காளீஸ்வரி கோவிலின் 30-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி பொன்னுசாமி தலைமை தாங்கினார். சேலம் உதவி ஆணையாளர் ராமசாமி, டாக்டர் கோதண்டராமன், தொழிலதிபர்கள் என்.ஆர். சுப்பிரமணியராஜா, பீமராஜா, கே.ஏ.சுப்பராஜா, ஹரிஹரன், தர்மகிருஷ்ண ராஜா ஆகியோரது குடும்ப வகையறாக்கள் முன்னிலை வகித்தனர். அம்மனுக்கு வருடாபிஷேகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தன. மேலும் ஓம் சக்தி வழி விடு விநாயகர், பாலசுப்பிரமணியசுவாமி, சந்தனகருப்புசாமி, பீம பைரவர், காரிய சித்தி விநாயகர் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள், விசேஷ பூஜைகளும் நடந்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வருடாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. தர்மகர்த்தா டாக்டர் செந்திலாதிபன் அன்னதானத்தை ெதாடங்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா டாக்டர் செந்திலாதிபன்,டாக்டர் மணிகண்ணன் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.