என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மதுபோதையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர் சாவு மதுபோதையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர் சாவு](https://media.maalaimalar.com/h-upload/2022/06/12/1710869-death.jpg)
X
மதுபோதையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர் சாவு
By
மாலை மலர்11 Jun 2022 5:50 PM IST (Updated: 12 Jun 2022 11:57 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ராஜபாளையம் அருகே மதுபோதையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர் பலியானார்.
- சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் உள்ளது.
இந்தத் தெப்பக்குளம் அருகில் பாலம் உள்ளது. அதில் நேற்று மாலை 45 வயது மதிக்கத்தக்க நபர் மது போதையில் படுத்து இருந்தார். அவர் திடீரென தவறி தெப்பக்குளத்தில் விழுந்து விட்டார்.
இதனை கண்ட துப்புரவுத்தொழிலாளர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தெப்பக்குளத்தில் தவறி விழுந்து பலியானவர் யார்? என்று தெரியவில்லை. இது குறித்து சேத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜகணபதி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
X