என் மலர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் குப்பையில்லா காடுகளை உருவாக்க உழைக்கும் தன்னார்வலர்கள்
- கொடைக்கானல் காடுகள் மற்றும் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலமாகும்.
- 10,000 கிலோவிற்கு மேலாக குப்பைகளை அகற்றம்
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி–யான கொடைக்கானல் காடுகள் மற்றும் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலமாகும்.
இங்கு அரிய வகையான மலர்கள், தாவரங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன. பசுமை போர்த்திய புல்வெளிகள் தற்போது பல இடர்பாடுகளால் தன்னுடைய அழகை இழந்து வருகிறது. மலைகளில் மனிதர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் வன நிலமும், வனவிலங்குகளும் பல காரியங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பிளா ஸ்டிக் பொரு–ட்களை காடுகளுக்குள் வீசுவது, பாட்டில்களை வனப்பகுதி க்குள் வீசுவது, மலைகள் சூழ்ந்த பகுதியில் புகை ப்பிடிப்பது போன்று பல காரியங்கள் நம்மை அறிந்தும் அறியாமலும் நடைபெற்று வருகிறது.
இதனால் வனங்கள் காட்டுத்தீ உள்ளிட்டவை–களாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.மேலும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் வனவிலங்குகளை பாதிக்கும் வகையில் மனிதர்கள் வீசக்கூடிய பொருட்களை வனவிலங்குகள் சாப்பிட்டு அதுவும் உயிரிழக்க நேரிடுகிறது.
கொடைக்கானல் மலை ப்பகுதியில் பிளாஸ்டிக் பைகளை உண்டு பல வன உயிரினங்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிட–த்தக்கது. மலைகளை காப்பாற்றுவதற்காக பலரும் தங்களுடைய பங்களிப்பை அளித்து வரக் கூடிய நிலையில் கொடை–க்கானலில் சோலைக் குருவி என்ற அமைப்பு முதலில் 2 நபர்களால் ஆரம்பிக்கப்பட்டு காடுகளுக்கு அருகே இருக்கக்கூடிய குப்பைகளை அகற்றி வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளில் சோலைக்குருவி என்ற அமைப்பு மிகப்பெரிய அளவில் வளர்ந்து தற்போது கொடைக்கானல் பகுதியில் பல இடங்களில் வனங்களையும் வனவில–ங்குகளை பாதுகாக்கும் வகையில் காடுகளில் வீசக்கூடிய குப்பைகளையும், பாட்டில்களையும் அகற்றி வருகிறார்கள்.
சோலைக்குருவி அமை ப்பில் தற்போது பலரும் இணைந்து குப்பைகளை அகற்றி வருகிறார்கள். இதுவரையில் கடந்த 2 ஆண்டுகளில் 10,000 கிலோவிற்கு மேலாக குப்பைகளை அகற்றி இருப்பதாக சோலை குருவியை சேர்ந்த நபர்கள் தெரிவிக்கிறார்கள்.அகற்றப்படும் குப்பைகளை தினமும் குப்பை அள்ளும் தொழிலாளர்களுக்கு கொடுக்கிறார்கள். அந்த குப்பையை வைத்து குப்பை அள்ளும் தொழில் செய்பவர்கள் பிழைத்து வருகிறார்கள்.
மேலும் இந்த அமைப்பின் ஒரே நோக்கம் குப்பையில்லா காடுகளை உருவாக்குவது மட்டும்தான். இவர்கள் மட்டுமல்லாது பலரும் கொடைக்கானல் இழந்த அழகை மீண்டும் புத்துணர்ச்சி அளிப்பதற்காக தங்களுடைய சேவைகளை செய்ய வேண்டும் என்பதே மலை சார்ந்து வாழக்கூடிய மக்களின் கோரிக்கையும் மலையை விரும்பும் மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.