என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்திற்கு வந்த காவிரி நீருக்கு வரவேற்பு
    X

    கும்பகோணம் விஜயீந்திர மடம் சார்பில் காவிரி படித்துறையில் காவிரி நீருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கும்பகோணத்திற்கு வந்த காவிரி நீருக்கு வரவேற்பு

    • டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது.
    • கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது.

    காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது. கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    காவிரி நீர் கும்பகோணம், மணஞ்சேரி, கல்யாணபுரம், பருத்திக்குடி ஆகிய பகுதிகளை கடந்து சென்றது.

    அப்போது கும்பகோணம் விஜயீந்திர மடம் சார்பில் காவிரி படித்துறையில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து காவிரி நீரில் பாலை ஊற்றி தீபாராதனை காண்பித்தனர்.

    பின்னர் மலர் தூவியும், தேவார பாடலை பாடியும் காவிரி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    Next Story
    ×