என் மலர்
உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் ரூ.16.10 கோடி செலவில் 3,225 மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் அம்ரித் தகவல்
- தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25.20 லட்சம் மதிப்பில் 45 பேருக்கும் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
- மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 55 பேருக்கு ரூ.3.76 லட்சம் மதிப்பிலும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளி யிட்டு உள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்தி றனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகள் நலத்துறை மூலம் கடந்த 7. 5.2021 முதல் 24. 8.2023-ம்ஆண்டுவரை மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.9.38 கோடி மதிப்பில் 1,676 பேருக்கு பராமரிப்பு உதவித்தொகையும், கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5.54 கோடி மதிப்பில் 990 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையும், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25.20 லட்சம் மதிப்பில் 45 பேருக்கும் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல கூடுதல் நிதி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 81 பேருக்கு ரூ.22.68 லட்சம் மதிப்பிலும், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு உள்ள 27 பேருக்கு ரூ.6.48 லட்சம் மதிப்பில் பராமரிப்பு உதவித்தொகை யும், சுயதொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் ரூ.9.13 லட்சம் மதிப்பில் 38 பேருக்கு வங்கிக் கடன் மானிய உதவியும், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 7 பேருக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலும், கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 259 பேருக்கு ரூ.8.68 லட்சம் மதிப்பிலும், மின்களம் ரூ.10 லட்சம் மதிப்பில் 10 பேருக்கு சக்கர நாற்காலியும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் திட்டத்தின்கீழ் 37 பேருக்கு ரூ.29.17 லட்சம் மதிப்பிலும், மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 55 பேருக்கு ரூ.3.76 லட்சம் மதிப்பிலும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3,225 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.