என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கணவர் குடும்ப செலவிற்காக பணம் கொடுக்காததால் மனைவி தற்கொலை கணவர் குடும்ப செலவிற்காக பணம் கொடுக்காததால் மனைவி தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2023/04/26/1872186-163-suicide.webp)
கணவர் குடும்ப செலவிற்காக பணம் கொடுக்காததால் மனைவி தற்கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அவரது மனைவி பிரதீபா செல்போனில் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
- மனவேதனை அடைந்த பிரதீபா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பகலூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் மலாத்தீவில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரதீபா (வயது35). அய்யப்பன் வெளிநாட்டில் வேலை செய்வதால் குடும்ப செலவிற்காக மாதந்தோறும் பணம் அனுப்பி வைப்பார். இந்த நிலையில் அய்யப்பன் கடந்த மாதம் குடும்ப செலவிற்காக பணம் அனுப்பாமல் இருந்தார். இதுகுறித்து அவரது மனைவி பிரதீபா செல்போனில் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரதீபா விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரதீபா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.