என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் முன்பதிவு செய்ய தனி அலுவலர் நியமிக்கப்படுவாரா?- தட்கல் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி
- பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை நம்பியே உள்ளனர்.
- முன்பதிவில்லா பயணச்சீட்டும் குறித்த நேரத்திற்குள் பெற முடியவில்லை.
தென்காசி:
நெல்லை - தென்காசி ரெயில் வழித்தடத்தில் மிக முக்கியமான ரெயில் நிலையமாகவும், 2-வது அதிக வருமானம் தரும் ரெயில் நிலையமாகவும் பாவூர்சத்திரம் விளங்கி வருகிறது.
இந்த ரெயில் நிலையத்தில் தற்போது காலை 8.30 முதல் 10.30 வரையும், நண்பகல் 11.30 முதல் 12.30 வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் முன்பதிவு மையம் இயங்கி வருகிறது. இந்த முன்பதிவு மையமானது ரெயில் நிலைய மேலாளர்களால் இயக்கப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தனியாக வர்த்தக அலுவலர்கள் யாரும் கிடையாது. இதனால் சில நேரங்களில் பராமரிப்பு பணிகளுக்காக ரெயில்கள் வரும் போது ஸ்டேஷன் மாஸ்டர்களால் முன்பதிவு செய்ய முடிவதில்லை.
மேலும் பாவூர்சத்திரம் ரெயில் நிலையமானது பிளாக் ஸ்டேஷன் என்பதால், தென்காசிக்கும், கடையத்துக்கும் இடையே உள்ள ரெயில்வே கேட்டு களை மூடுவது, திறப்பது குறித்த கட்டுப்பாட்டு அறை பாவூர்சத்திரத்தில் உள்ளது.
பயணிகள் தவிப்பு
ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்கள் இயக்கத்தை ஒழுங்கு படுத்துவது மட்டுமல்லாமல் முன்பதிவையும் சேர்த்து செய்வதால், சரியான நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து திப்ப ணம்பட்டியைச் சார்ந்த ரெயில் பயணி ஜெகன் கூறியதாவது:-
பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை நம்பியே உள்ளனர்.
சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு செல்வதற்கு 120 நாட்களுக்கு முன்பாக காலை 8 மணிக்கு செய்யப்படும் முன்பதிவு, காலை 11 மணிக்கு குளிர்சாதன வசதி அல்லாத பெட்டிகளுக்கு செய்யப்படும் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
காலை 10 மணிக்கு செய்யப்படும் ஏ.சி. தட்கல் மட்டுமே முன்பதிவு செய்ய முடிகிறது. பரா மரிப்பு ரெயில்கள் வந்து விட்டால் அதுவும் செய்ய முடியாது.
ரெயில்வேயின் ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக, வர்த்தகப் பணியாளர்கள் நீக்கப்பட்டு, ரெயில் நிலைய மேலாளர்கள் மேற்கொள்வதால், ரெயில்கள் வரும் நேரங்களில் முன்பதிவு செய்ய முடியவில்லை. மேலும் முன்பதிவில்லா பயணச்சீட்டும் குறித்த நேரத்திற்குள் பெற முடிய வில்லை.
தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படும் நேரங்களில் பயணி களுக்கும், நிலைய மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு பாவூர்சத்தி ரம் தபால் நிலையத்தில் ரெயில் முன்பதிவு மையம் செயல்பட்டு வந்ததால் பயணிகள் மிகவும் பயன டைந்து வந்தனர். தற்போது அங்கும் ஆள் குறைப்பு நடவடிக்கை காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டுள்ளது.
எனவே ஆயிரக் கணக்கான பயணிகளின் நலன் கருதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்பதிவு மையம் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் செயல் படும் வகையில் தனியாக டிக்கெட் முன்பதிவு ஊழியர் ஒருவரை நியமித்து முன்பதிவு மற்றும் முன்பதிவல்லாத டிக்கெட்டுகள் தடைபடாமல் தொடர்ந்து இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்