என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச்சுவர் உயர்த்தி கட்டப்படுமா?
- குமாரபாளையம் அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச்சுவரை கட்ட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாணவியர்களின் நலன் காக்க இந்த புகார் அனுப்பினேன்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறை பகுதியில் சுற்றுச்சுவர் தாழ்வாக இருப்பதால் அதனை உயர்த்தி கட்டி, மாணவியரின் சங்கடத்தை போக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய நகர மகளிரணி நிர்வாகி சித்ரா பொதுப்பணித்துறை அதிகாரிக்கு புகார் மனு அனுப்பினார்.
இதற்கு நாமக்கல் செயற்பொறியாளர் அருள் பதில் அனுப்பிய கடிதத்தில், இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து நிதி பெற்றுக்கொடுக்கும் பட்சத்தில் பணி செயலாக்கத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது பற்றி சித்ரா கூறுகையில், மாணவியர்களின் நலன் காக்க இந்த புகார் அனுப்பினேன். இதனை சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து என்னை நிதி பெற்று தர சொல்வது, பொதுநல ஆர்வலர்களை இழிவு படுத்துவதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.