search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி வழியாக நெல்லை - பெங்களூரு, மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? - பயணிகள் எதிர்பார்ப்பு
    X

    தென்காசி வழியாக நெல்லை - பெங்களூரு, மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? - பயணிகள் எதிர்பார்ப்பு

    • நெல்லையில் இருந்து பெங்களூருவிற்கும் தென்காசி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
    • தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியினர் பெங்களூரு மற்றும் ஓசூருக்கு பணிநிமித்தமாக சென்று வருகின்றனர்.

    தென்காசி:

    தற்போது நெல்லையில் இருந்து தென்காசி வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையத்திற்கும், தென்காசி வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ஆகிய சிறப்பு ரெயில்களை தென்னக ரெயில்வே இயக்கிவருவது ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில்களைப் போலவே நெல்லையில் இருந்து பெங்களூருவிற்கும் தென்காசி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தற்போது தென்மேற்கு ரெயில்வே சார்பில் மைசூரில் இருந்து மயிலாடுதுறை மற்றும் தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.

    மறு மார்க்கத்தில் 5,12,19 ஆகிய தேதிகளில் சனிக்கிழமை தோறும் தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதைப்போலவே தென்காசி வழியாக பெங்க ளூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    பணி நிமித்தமாக

    அம்பை,பாவூர்சத்திரம், தென்காசி,ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பெரும்பாலோனார் பெங்களூரு மற்றும் ஓசூருக்கு பல்வேறு பணிநிமித்தமாக சென்று வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவர்களும் பலர் பெங்களூருவில் பயின்று வருகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்துகளில் மிக அதிக தொகை கொடுத்து செல்லும் நிலைதான் தற்போது உள்ளது.

    மேலும் தென்காசி மற்றும் நெல்லை மேற்கு பகுதி மக்கள் பெங்களூர் செல்ல நெல்லை ரெயில் நிலையத்திற்கு சென்று நாகர்கோவில் - பெங்களூர் ரெயிலை பிடிக்க வேண்டும்.

    அது போல சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி பகுதி மக்கள் பெங்களுர் செல்ல கோவில்பட்டி அல்லது விருதுநகர் ரெயில்நிலையம் சென்று தூத்துக்குடி-மைசூரு ரெயிலை பிடிக்க வேண்டும். இதனால் தேவையற்ற பண விரயமும், கால விரயமும் பொதுமக்க ளுக்கு ஏற்படுகிறது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில்,

    பெங்களூரில் 315 கோடி செலவில் முழுவதும் குளிரூட்டப்பட்ட சர். விஸ்வேஸ்வரையா ரெயில்வே நிலையம் பொதுமக்களின் பயன் பாட்டுட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய முனையத்தில் 7 நடைமேடைகள், 3 ரெயில் பராமரிப்பு பிட் லைன்கள், பராமரிப்பு பணி முடிந்த பின் ரெயில்களை பார்க்கிங் செய்ய 8 ஸ்டேப்பிலிங் லைன்களும் உள்ளன. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு அம்பாச முத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை, நாமக்கல் வழியாக பெங்க ளூருக்கு ரெயில் இயக்க வேண்டும். நெல்லையில் காலியாக இருக்கும் 2 ரெயில்களை கொண்டு 2 சிறப்பு ரெயில்கள் இயக்குவதை போல, பெங்களூருவில் காலியாக நிற்கும் ரெயில் பெட்டிகளை கொண்டு பெங்களூரு - நெல்லை இடையே தென்காசி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

    ஏற்கனவே மைசூர் மற்றும் பெங்களூருக்கு தென்மேற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்கள் இயக்க ஆர்வம் காட்டுவதால் தெற்கு ரெயில்வே அதற்கு வழித்தட அனுமதி கொடுத்து பெங்களூருக்கு ரெயில்களே இல்லாத ராஜபாளையம், தென்காசி, அம்பை வழியாக நெல்லைக்கு இயக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×