என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோவை அருகே யானை தாக்கி பெண் படுகாயம் கோவை அருகே யானை தாக்கி பெண் படுகாயம்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/08/1846631-injurey.webp)
கோவை அருகே யானை தாக்கி பெண் படுகாயம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வாழைத்தார்களை ஒற்றை காட்டு யானை தின்று கொண்டிருந்தது.
- 2 பேர் இறந்த நிலையில் இன்று ஒரு பெண்மணியை யானை தாக்கியுள்ளது
கவுண்டம்பாளையம்,
கோவை கணுவாய் அடுத்துள்ள சோமையனூரில் இருந்து மடத்தூர் செல்லும் சாலையில் நல்லதம்பி கவுண்டர் தோட்டம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பாலாமணி(வயது40). இவர் இன்று காலை 4 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களை ஒற்றை காட்டு யானை தின்று கொண்டிருந்தது.
யானையை பார்த்ததும் பாலாமணி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை தனது தும்பிக்கையால் பாலாமணியை தாக்கியது.
இதில் பாலாமணியின் முதுகு எலும்பு உடைந்து அவர் பலத்த காயத்துடன் அலறினார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அந்த யானையை வனப்ப குதிக்குள் விரட்டினர். இது தொடர்பாக விசாரித்தும் வருகிறார்கள்.
கடந்த வாரத்தில் யானை தாக்கி 2 பேர் இறந்த நிலையில் இன்று ஒரு பெண்மணியை யானை தாக்கியுள்ளது இந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.