என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கடையநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பெண் தவறவிட்ட தங்க நகைகள்- 5 நிமிடத்தில் மீட்டு ஒப்படைத்த போலீசார் கடையநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பெண் தவறவிட்ட தங்க நகைகள்- 5 நிமிடத்தில் மீட்டு ஒப்படைத்த போலீசார்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/13/1965511-4collectorpr.webp)
கடையநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பெண் தவறவிட்ட தங்க நகைகள்- 5 நிமிடத்தில் மீட்டு ஒப்படைத்த போலீசார்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பத்திரகாளி வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளை மீட்டு அதனை ஒரு பையில் வைத்துக்கொண்டு சென்றார்.
- சாலையில் கிடந்த பையை வயதான மூதாட்டி எடுத்துச் செல்வது சி.சி.டி.வி. காட்சி ஆய்வில் தெரியவந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் கட்டி விநாயகர் கோவில் தென்வடல் தெருவில் வசித்து வருபவர் திருமலைச்சாமி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி பத்திரகாளி (வயது 50).
இவர் கடையநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த 10 கிராம் எடையுள்ள மோதிரம், கைச்செயின் உள்ளிட்ட தங்க நகைகளை மீட்டு அதனை ஒரு பையில் வைத்துக்கொண்டு, கடைய நல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தவறி விழுந்த அந்த பையை யாரோ மர்ம நபர் எடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து பத்திரகாளி உடனடியாக கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன், ஏட்டு சங்கர் ஆகியோர் பஸ் நிறுத்தத்தில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் கிடந்த பையை வயதான மூதாட்டி எடுத்துச் செல்வது தெரியவந்தது.
உடனடியாக பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அந்த மூதாட்டியிடம் இருந்து பையை போலீசார் மீட்டு பத்திர காளியிடம் ஒப்படைத்தனர். 5 நிமிடத்தில் துரிதமாக செயல்பட்டு தவறவிட்ட நகையை மீட்டுக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.