என் மலர்
உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி- தேங்காய் பறித்த போது நேர்ந்த பரிதாபம்
- உயர்மின் அழுத்த கம்பி எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்தது.
- இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கொடமாண்டப்பட்டி பகுதியில் முருகன் என்பவரது தோப்பில் மாதம்பதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்றுகாலை தேங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது மரத்தின் அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பி எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்த மணிகண்டன் உறவினர்கள் விரைந்து வந்து உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து இதே போல் பல இடங்களில் உயர்மின்அழுத்த கம்பி தாழ்வாக செல்வதால் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வைத்து போராட்டம் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களின் கோரிக்கையை விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் இன்றுகாலை அந்த பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.