என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள்.
இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தின விழிப்புணர்வு பேரணி
- யோகா பேரணியை இன்ஸ்பெக்டர் செல்வி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
- யோகா விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு மாணவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
தென்காசி:
இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உலக யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பள்ளி கல்வி குழும தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் செயலர் காந்திமதி மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினர். முதல்வர் வனிதா மற்றும் துணை முதல்வர் கிப்ட்சன் கிருபாகரன் முன்னிலை வகித்தனர்.
காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த யோகா பேரணியை இன்ஸ்பெக்டர் செல்வி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாணவர்கள் பாட்டு, நடனம், யோகா உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்தினர்.
காவலர்கள் மற்றும் பொதுமக்கள் யோகா விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி கல்விக் குழுமத் தலைவர், செயலர் மற்றும் முதல்வர் வனிதா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story