என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஊட்டியில் மஞ்சள் பை விழிப்புணர்வு விழா ஊட்டியில் மஞ்சள் பை விழிப்புணர்வு விழா](https://media.maalaimalar.com/h-upload/2022/06/25/1718696-ooty.jpg)
X
ஊட்டியில் மஞ்சள் பை விழிப்புணர்வு விழா
By
மாலை மலர்25 Jun 2022 3:08 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- இன்றைய காலகட்டத்தில் மஞ்சள் பை எவ்வளவு தேவை என்பதை விரிவாக கூறி பொது மக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் தலைமை தாங்கினார்.
விழாவில், இன்றைய காலகட்டத்தில் மஞ்சள் பை எவ்வளவு தேவை என்பதை விரிவாக கூறி பொது மக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர்.சிவக்குமார், தே.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்சியில் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சித்ரா, மற்றும் உறுப்பினர்கள் வனிதா,தொரை,காமராஜ்,சிவசுப்ரமணியம்,சந்தோஸ்,சரோஜா,லட்சுமி,சாரதா, ஜெயபால்,தமிழ்வாணி,தர்மராஜ்,பாலகிருஷ்ணன்,கல்பனா,பிரேமா,ஷீலாராணி,அஞ்சலி,லட்சுமி,கிட்டான்,ஷகிலா,ராஜா மற்றும் அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X