என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சப்-இன்ஸ்பெக்டர் கன்னத்தை கடித்த வாலிபர் கைது சப்-இன்ஸ்பெக்டர் கன்னத்தை கடித்த வாலிபர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/09/04/1756623-1259694-1nagappattinam.jpg)
கைதான விக்னேஷ்
சப்-இன்ஸ்பெக்டர் கன்னத்தை கடித்த வாலிபர் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வாழக்கரை பகுதியில் ஒரு கார் பழுதடைந்த நிலையில் சேற்றில் சிக்கி நிற்பதாக தகவல் கிடைத்தது.
- மது போதையில் இருந்த விக்னேஷ் ஆத்திரமடைந்து செந்திலை தாக்கியதுடன், கன்னத்தையும் கடித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் திருக்குவளை கடைத்தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வாழக்கரை பகுதியில் ஒரு கார் பழுதடைந்த நிலையில் சேற்றில் சிக்கி நிற்பதாக தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அங்கு சென்று செந்தில், காரை மீட்கும் முயற்சியை மேற்கொண்டார். அப்போது அந்த காரில் வந்த பாங்கல் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவர், தனது மனைவியிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது காரை எடுக்க உதவாமல், ஏன் மனைவியிடம் சண்டை போட்டுக் கொள்கிறாய் என்று செந்தில்கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த விக்னேஷ் ஆத்திரம் அடைந்து செந்திலை தாக்கியதுடன், கன்னத்தையும் கடித்துள்ளார்.
இதில் காயம் அடைந்த செந்தில் திருக்குவளை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து செந்தில் அளித்த புகாரின்பேரில், திருக்குவளை போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.