என் மலர்
உள்ளூர் செய்திகள்
வடலூரில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
- கலையரசன் மற்றும் 2 பேர் வேல் முருகனை வழிமறித்து, அசிங்கமாக திட்டி, கழுத்தை கையால் இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
- கலையரசன் மீது வடலூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்:
வடலூர்கோட்டக் கரையை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் தமிழரசன் (26).இவர் விநாயகர் கோயில் அருகில் உள்ள புங்க மரத்துக்கு அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த வெங்கடாசலம் மகன்கலையரசன் மற்றும் 2 பேர் வேல் முருகனை வழிமறித்து, அசிங்கமாக திட்டி, கழுத்தை கையால் இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இது சம்பந்தமாக வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை மேற் கொண்டு பார்வதிபுரம் கலைப]யரசன் (வயது 31) மற்றும் பரஞ்ஜோதி, ஜெய பிரகாஷ் ஆகியோர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். வழக்கில் சம்பந்தப்பட்ட கலையரசன் மீது வடலூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.இவர் மீது 2 கொலை முயற்சி வழக்கு, ஒரு அடிதடி வழக்கு உள்ளன. இவரின் குற்றசெய்கையை கட்டுப் டுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் பரிந்துரையின்பேரில் கடலூர் மா வட்ட கலெக்டர்பாலசுப்பிர மணியம் 1 ஆண்டுகாலம் குண்டர் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டதன் பேரில் கலையரசன் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.