என் மலர்
கதம்பம்
அனுபவ பாடம்!
- சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலைக் கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு முல்லாவைத் தொடர்ந்தார்.
- சாமியார், "முட்டாள் இதைக் கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய்?"
முல்லா தனது வீட்டின் கூரை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் . முல்லா மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் என்ன விசயம்? எதற்காக என்னை கீழே வருமாறு அழைத்தீர்கள் ? எனக்கேட்டார்.
அந்த சாமியார் "நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன். அதைச் சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது. அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன், மன்னிக்கவும்" என்றார்.
உடனே முல்லா " எடுப்பது பிச்சை இதில் போலி கவுரவம் வேறு. சரி பரவாயில்லை என்னுடன் வா" என்று சொல்லிவிட்டு மீண்டும் கூரை மேல் ஏறினார்.
அந்தச் சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலைக் கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு முல்லாவைத் தொடர்ந்தார்.
சாமியார் மேலே வந்து சேர்ந்ததும், முல்லா மீண்டும் தனது வேலையைப் பார்க்கத்தொடங்கினார்.
சாமியார், எனக்கு என்ன தருகிறீர்கள்? எனக் கேட்டார். சற்று பொறுமை இழந்தவராக முல்லா "என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை, மன்னிக்கனும்" என்றார்
சாமியார், "முட்டாள் இதைக் கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய்?"
முல்லா , " என் பக்கத்து வீட்டுக்காரன் இருந்தான். அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல வெட்கமாக இருந்தது அதான். மற்றும் நான் கீழே வரப்பட்ட அனுபவத்தையாவது (கஷ்டத்தையாவது) உனக்கு தானமாக கொடுக்கலாம் என்று உன்னை அழைத்தேன். ஹீ ஹி… " என்றார்.
"அனுபவப் பாடம் எப்போதுமே உபயோகமானது"
-ஓஷோ