என் மலர்
கதம்பம்
ஏன் சார் அடிக்கிறீங்க..?
- என்ன சார்.. போன வருசம் அறுபது தேங்கா கொடுத்துகிட்ருந்துச்சு.
- அதவிட்டுப்புட்டு அதெ அடிச்சா என்ன அர்த்தம்.. பைத்தியக்காரத் தனமால்ல இருக்கு..
ஆசிரியர்:- யோவ்.. யார்யா நீ.. தென்ன மரத்தை போயி குச்சியால அடிச்சிக்கிட்ருக்க?
விவசாயி:- பின்ன என்ன சார்.. போன வருசம் அறுபது தேங்கா கொடுத்துகிட்ருந்துச்சு.. இப்போ என்னடான்னா முப்பது கூட தர மாட்டீங்குது.. என்ன நெனச்சிக்கிட்ருக்கு..!
ஆசிரியர்: - நீங்க என்ன லூசா .. தென்ன மரம் காய் குறைவா தருதுன்னா.. அதுக்கு என்ன குறைன்னு பாருங்க.. உரம் கம்மியா இருக்கா.... இல்ல வேர்ல எதாவது சேதாரம் இருக்கா.... இல்ல தண்ணி சரியா பாய்ச்சலியா.... இல்ல எதாவது பூச்சி அரிச்சிருக்கான்னு பாருங்க... அதவிட்டுப்புட்டு அதெ அடிச்சா என்ன அர்த்தம்.. பைத்தியக்காரத் தனமால்ல இருக்கு..
விவசாயி: - இது பைத்தியக்காரத் தனம்னா.. உங்ககிட்ட படிக்கிற மாணவர்களை சரியா படிக்கலைன்னு பிரம்பால அடிக்கிறீங்களே.. அது மட்டும் தப்பில்லையா...?
ஒரு மாணவர் சரியா படிக்கலைன்னா... அதற்கான சூழல் தப்பா இருக்கலாம்... அது அவங்க பெற்றோரா... இல்ல கூடப் படிக்கிற நண்பர்களா.... இல்ல அவங்க கத்துக்கற முறையா... இல்ல சொல்லித் தர்றவங்க சொல்லி தர்ற முறையில இன்னும் தெளிவும், எளிமையும், ஈடுபாடும் அதிகரிக்க வேண்டி இருக்கா.. இதெ ஆராய்ந்து அதுக்கேத்த மாதிரி ட்ரீட் பண்ணுங்க.. அதெ விட்டுப்புட்டு மனரீதியா முழுசா பக்குவப்பட்டிருக்காத பசங்கள அடிச்சா மட்டும் படிச்சிருவாங்களா சார்..
-குலசேகர்