search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    தென்னிந்திய காபி வரலாறு
    X

    தென்னிந்திய காபி வரலாறு

    • காபிக் கொட்டைளை நன்றாக இளங்கருப்பு கலர் வரும்வரை வறுக்க வேண்டும்
    • சிக்கரி வேர்களை காயவைத்து, வறுத்து, பவுடர் செய்துவதுதான் சிக்கரி.

    16வது நூற்றாண்டில், மைசூர் இஸ்லாமியர் ஆட்சியர்களின் கீழ் இருந்தது. பாபா புடான் என்ற சுபி துறவி இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இணைந்து வாழ்ந்தவர். இவர் மெக்காவுக்கு புனித யாத்திரை செய்த போது, காபியின் சிறப்பை அறிந்து, 7 காபிக் கொட்டைகளை தனது அங்கியில் மறைத்து வைத்து யேமெனி துறைமுகத்திலிருந்து சிக்மகளூர் திரும்பினார்.

    இங்கு வந்து சந்திரகிரி மலையில் விதைத்து வளர்ந்ததுதான் கூர்க் சிக்மகளூரு காபியின் ரகசியம். தற்போது இந்த மலைப்பகுதி பாபா புடன் பெட்டா என அவரின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இவரது சமாதியும் இங்கு இருக்கிறது.

    காபிக் கொட்டைளை நன்றாக இளங்கருப்பு கலர் வரும்வரை வறுக்க வேண்டும். சிக்கரி 20% கலப்பதுதான் தென்னிந்தியாவின் ரகசியம். சிக்கரியின் இலேசான கசப்புத் தன்மை . இதை இந்த மாதிரி மெஷினில் அரைத்து பவுடர் ஆக்குவார்கள்.

    சிக்கரி என்பது என்ன ?

    சிக்கரி என்பது ஐரோப்பிய, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியாவில் நம்மூர் இஞ்சி போல வளரும் தாவரம், பிற்காலங்களில் இந்தியாவுக்கும் வந்தது. சிக்கரி மாடுகளுக்காக முதலில் வளர்க்கப்பட்ட தாவர வகை. இது தானே எங்கு பார்த்தாலும் மழைகாலங்களில் அடர்ந்து வளரும். இது ஒரு வகை கசப்பு தன்மை கொண்டது.

    இந்த சிக்கரி வேர்களை காயவைத்து, வறுத்து, பவுடர் செய்துவதுதான் சிக்கரி. இந்த சிக்கரி டீ நல்ல சக்தியைக் கொடுக்கக் கூடியது. போர், குளிர் காலங்களில் ஐரோப்பியர்கள் அடிக்கடி உபயோகிப்பர்.

    ப்ரான்சில் நெஸ்லே கம்பனி 60% சிக்கரி 40% காபிபவுடர் கலந்து "ரிகோர்" காபி மிகப்பிரபலம். பால் சேர்க்க மாட்டார்கள். மதராஸ்-மைசூர் கலவை 80:20 மற்றும் இங்கு பால், தேன், வெல்லம், சீனி சேர்ப்பது. கலோரி இங்கு அதிகம். அதுதான் காலையில் காபி சாப்பிட்டால் அந்த சக்தியே பலமணிநேரம் பசியைத் தாங்கும்.

    -வெங்கடேஷ் கவிதா

    Next Story
    ×