என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கதம்பம்
![உனக்காக உண்ணு... பிறருக்காக உடுத்துக் கொள்! உனக்காக உண்ணு... பிறருக்காக உடுத்துக் கொள்!](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9269015-foodd.webp)
உனக்காக உண்ணு... பிறருக்காக உடுத்துக் கொள்!
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அழகு! சூழ்நிலையின் இறுக்கத்தை குறைத்துவிடும் ஆற்றல் பெற்றது.
- உங்கள் நிறத்துக்கும், உடல்வாகுக்கும், ஏற்ற நிறத்தில் உடை இருப்பது நல்லது.
அழகாயிருப்பவரை , அழகாய் உடுப்பவரை, அழகாய் நடப்பவரை, அழகாய் பேசுபவரை, அழகாய் சிரிப்பவரை உலகம் நேசிக்கிறது. அழகை உலகம் விரும்புகிறது.
உங்களுக்கு எத்தனை வயதானால் என்ன உங்களை அழகாய் வெளிப்படுத்துங்கள். அழகாக இருப்பதும் ஒரு பண்புதான் என்கிறது உளவியல்.
அழகு! சூழ்நிலையின் இறுக்கத்தை குறைத்துவிடும் ஆற்றல் பெற்றது. அதனால்தான் அழகானவர்களை வரவேற்பறைகளில் விழாக்களின் மேடையில் நாம் முன்நிறுத்துகிறோம்.
அழகாக உடுத்திக்கொண்டு வியர்வை நாற்றம் போக நறுமணம் பூசிக்கொண்டு ஓரிடத்திற்கு செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது போகும் வேலை பாதி முடிந்துவிட்டது போலத்தான். அழகாக எப்போதும் இருக்க சிரிக்க முயற்சியுங்கள், அழகால் வெற்றி நிச்சயம்.
மலர்களைப் பாருங்கள். அவற்றின் மணமும் அழகும் நிரந்தரமல்ல. மிகக் குறைந்த ஆயுள் கொண்டதுதான். ஆனாலும் அவற்றால் அழகான பெண்களைக் கவர்ந்துவிட முடிகிறதே.
மலர்களின் அழகும் மணமும் எல்லாரையும் ஈர்க்கக் கூடியது. அவற்றைப்போல நாமும் அழகும் மணமும் கொண்டிருக்கும்போது எல்லோராலும் ரசித்துப் பார்க்கப்படுவோம்.
கண்ணுக்கு மட்டும் அழகாய்த் தோன்றுவது உண்மையான அழகு அல்ல. எது நெஞ்சைக் கொள்ளை கொண்டு உங்களை ஆக்ரமித்துக் கொள்கிறதோ அதுவே அழகு. காந்திஜியின் ஆடை ஏழை விவசாயியின் ஆடையைப் போன்று அரை ஆடைதான். ஆனாலும் அது சுத்தமாக இருந்தது. உடுத்தும் முறையில் அழகு இருந்தது.
"உனக்காக நீ உணவு அருந்த வேண்டும். பிறருக்காக நீ உடை உடுத்த வேண்டும்" என்கிறது பள்ளிப்பாடம்.
சுத்தம் சோறு போடும். அசுத்தம் நோயில் போடும்.
சுறுசுறுப்பு ஆரோக்கியமும் அந்தஸ்தும் கொடுக்கும். சோம்பேறித் தனம் சொங்கியிருக்கும் வறுமையை அளிக்கும்.
மேற்கண்ட வாசகங்களுக்கு பொருள் விளக்கம் தேவையில்லை. எளிதில் புரிந்துவிடும். ஒவ்வொருவரும் அவசியம் நினைவில் கொள்க. உங்களுடைய வயது, தொழில், வருவாய், வசதி போன்றவற்றுக்கேற்ற மாதிரி உடைகளும் இருப்பது சிறப்பு.
இளைஞன் முதியவர் போன்று. முதியவர் இளைஞனைப் போன்றும் உடை அணிவது கேலிக்குரியதாகும். உங்கள் நிறத்துக்கும், உடல்வாகுக்கும், ஏற்ற நிறத்தில் உடை இருப்பது நல்லது.
ஒருவர் எவ்வளவு பெரிய மனிதனாக, பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவருடைய தோற்றம் அழகானதாக நல்ல தோற்றமாக தெரியவில்லை என்றால் யாரும் ரசிக்க மாட்டார்கள்.
வாழ்க்கையில் சிலர் தோல்வியடைவதற்கும், பிறரின் கவனத்தில் நிற்காமல் போவதற்கும் இதுவும் ஒரு காரணம்.
- சபீதா ஜோசப்