என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கதம்பம்
![அவனே விடட்டும்.. அவனே விடட்டும்..](https://media.maalaimalar.com/h-upload/2022/09/20/1764838-mrradha.jpg)
அவனே விடட்டும்..
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி “சார் நீங்கள் உடனே கிளம்பலாம்” என்றார்.
- ‘பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்’ என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா.
1975ஆம் ஆண்டு வந்த அவசரநிலை சட்டத்தால் (மிசா) எம்.ஆர். ராதா கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தால் கைதான இந்தியாவின் ஒரே நடிகர் அநேகமாக ராதா ஒருவர்தான்.
வீட்டில் தூங்கி கொண்டிருந்த எம்.ஆர்.ராதா அவர்களை இரவில் எழுப்பி மிசாவில் கைது செய்து சிறையில் அடைந்தார்கள்.
சிறையில் அவரை பார்க்க வந்த அவரது மனைவி, "இனிமே இப்படி செய்யமாட்டேன்னு" எழுதிக் கொடுத்தா விட்டுருவாங்கலாமே... நீங்க எழுதிக் கொடுக்க வேண்டியதுதானே? என்று புலம்பினார்.
எம்.ஆர்.ராதா பதில் சொன்னார்; "அட நீ வேற...தூங்கிக்கிட்டு இருந்தவனை தூக்கிட்டு வந்து ஜெயிலிலே போட்டுருக்காங்க. இனிமே தூங்கமாட்டேன்னா எழுதி கொடுக்கமுடியும்..?அவனா புடிச்சான்...அவனே விடட்டும்!"
நடிகவேள் ராதாவின் மரண கலாய்!
ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி "சார் நீங்கள் உடனே கிளம்பலாம்" என்றார்.
'பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்' என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா.
இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவிக்கும் துறவு மனநிலையை ராதா பெற்றிருந்தார்.
-வள்ளியம்மை