என் மலர்
இந்தியா
ரெயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்த 11 ஆயிரம் பேர் பிடிபட்டனர்- ரூ.15.39 லட்சம் அபராதம்
- ரெயில்வே சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு முறையே ரூ.6.71 லட்சம் மற்றும் ரூ.8.68 லட்சம் என மொத்தம் ரூ.15.39 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- நீண்ட தூர ரெயில்களின் பொதுப்பெட்டிகளில் இருக்கைகளை ஆக்கிரமித்தவர்களில் 36 பேர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி:
பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு மாதகால இயக்கத்தை ரெயில்வே பாதுகாப்புப்படை அறிமுகப்படுத்தியது.
இந்த நடவடிக்கையின்போது, பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 5,100-க்கு மேற்பட்டோரும், மாற்றுத்திறனாளிகளின் பெட்டிகளை ஆக்கிரமித்த 6,300-க்கு மேற்பட்டோரும் பிடிபட்டனர். இவர்கள் மீது ரெயில்வே சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு முறையே ரூ.6.71 லட்சம் மற்றும் ரூ.8.68 லட்சம் என மொத்தம் ரூ.15.39 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ரெயில்களில் பயணிகளுக்கு தொந்தரவு செய்தது, பயணிகளிடம் தவறாக நடந்துகொண்டது போன்ற செயல்களில் ஈடுபட்ட 1,200-க்கும் மேற்பட்ட 3-ம் பாலினத்தவர்கள் பிடித்துச்செல்லப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ரூ.1.28 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
நீண்ட தூர ரெயில்களின் பொதுப்பெட்டிகளில் இருக்கைகளை ஆக்கிரமித்தவர்களில் 36 பேர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
இந்த தகவல்களை ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.