search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு ஓகே.. ஆனா அதை சம்பாதிக்க வேலை எங்கே? - சசி தரூர் கேள்வி
    X

    ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு ஓகே.. ஆனா அதை சம்பாதிக்க வேலை எங்கே? - சசி தரூர் கேள்வி

    • இனி மாதம் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை
    • வேலையின்மை பற்றி நிதியமைச்சர் குறிப்பிடவில்லை.

    2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

    அதில், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி மாதம் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் வரி கட்ட தேவையில்லை என்று அறிவித்தார்.

    இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து திருவனந்தபுர காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். கூட்டத்தின் பின் பாராளுமன்ற வளாகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர்,

    நடுத்தர வர்க்க வரி குறைப்புக்காக பாஜகவினர் மேஜைகளைத் தட்டி ஆரவாரித்தனர். 12 லட்சம் வருமானம் வரை வரி கிடையாது என்பது ஒரு நல்ல விஷயமாக இருக்கலாம்.

    சம்பளம் வாங்குபவர்களின் வரச்சுமை குறையலாம். ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், சம்பளம் இல்லையென்றால் என்ன நடக்கும்? வருமானம் எங்கிருந்து வரப் போகிறது? வருமான வரி விலக்கில் நீங்கள் பயனடைய, உங்களுக்கு உண்மையில் வேலைகள் தேவை.

    வேலையின்மை பற்றி நிதியமைச்சர் குறிப்பிடவில்லை. ஒரே நாடு, ஒரு தேர்தலை விரும்பும் கட்சி உண்மையில் ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் அதிக இலவசங்களை அவர்கள் வழங்குவது முரணாக உள்ளது. அவர்கள் தங்கள் கூட்டாளிகளிடமிருந்து அதிக கைதட்டலைப் பெறுவதற்காக அவர்கள் பல தேர்தல்களையும் நடத்துவார்கள் என்று தெரிந்தார்.

    Next Story
    ×