என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![காஷ்மீரில் தேசிய கீதத்தின் போது எழுந்து நிற்காத 12 பேர் மீது சட்ட நடவடிக்கை காஷ்மீரில் தேசிய கீதத்தின் போது எழுந்து நிற்காத 12 பேர் மீது சட்ட நடவடிக்கை](https://media.maalaimalar.com/h-upload/2023/07/07/1910890-national-anthem.webp)
காஷ்மீரில் தேசிய கீதத்தின் போது எழுந்து நிற்காத 12 பேர் மீது சட்ட நடவடிக்கை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஸ்ரீநகரில் சைக்கிள் ஓட்ட நிகழ்வின் நிறைவு விழா நடைபெற்றது.
- போலீஸ் இசைக்குழு மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
ஸ்ரீநகர்
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த மாதம், போலீஸ் ஏற்பாட்டில் நடந்த சைக்கிள் ஓட்ட நிகழ்வின் நிறைவு விழா நடைபெற்றது. துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா பங்கேற்ற இந்த விழாவின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அப்போது அதற்கு மரியாதை அளிக்கும்வகையில் சிலர் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது.இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எழுந்து நிற்பதை உறுதி செய்யாத சில போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதை ஸ்ரீநகர் போலீஸ் மறுத்துள்ளது.
அதன் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், 'தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சில போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் ஒரு தவறான தகவல் உலா வருகிறது.
ஆனால் இந்த விவகாரத்தில் 12 பேர் மீது சட்டரீதியான நடவடிக்கைதான் எடுக்கப்படுகிறது. மேலும், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நிற்பதை உறுதி செய்யாத போலீஸ் இசைக்குழு மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.