என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![காங்கிரசின் 139-வது நிறுவன தினம்: நாக்பூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் காங்கிரசின் 139-வது நிறுவன தினம்: நாக்பூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/12/28/1997835-9.webp)
காங்கிரசின் 139-வது நிறுவன தினம்: நாக்பூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
- நிறுவன தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தினை இன்று தொடங்குகிறது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் 139-வது நிறுவன தினம் டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சி கொடியை ஏற்றி வைத்தார். ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
139-வது நிறுவன தினத்தையொட்டி "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, அடிப்படை தினத்தில் காங்கிரஸ் கட்சி தனது கொள்கைகளில் இருந்து விலகாது. முன்னேறும் என்ற செய்தியை தெரிவிப்பது கடமையாகும். நாக்பூரில் ஒரு செய்தியை வழங்க உள்ளோம். பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு செயல்படுகிறோம்" என்றார்.
139-வது நிறுவன தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தினை இன்று தொடங்குகிறது. பிரமாண்ட பொதுக்கூட்டம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று மாலை நடக்கிறது.
"நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்ற தலைப்பில் இந்த பொதுக் கூட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது. இதில் 2 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா, 3 மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மாநில கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.