என் மலர்
இந்தியா
தண்ணீர் டிரம்மில் தலைகீழாக இறந்து மிதந்த 2 சிறுமிகள்.. கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கரம்
- நண்பகலில் வீட்டின் வெளியே விளையாடிகொணிடிருந்தனர்.
- மாநிலந்தை விட்டு தப்பியோட கிளம்பிக்கொண்டிருந்த அஜய் தாஸை போலீஸ் குழு கைது செய்தது.
மாகாராஷ்டிராவில் இரண்டு சிறுமிகளை கடத்தி கொலை செய்த 54 வயது நபரை புனே போலீசார் கைது செய்துள்ளனர்
புனேவின் ராஜ்குருநகர் பகுதயில் கூலித் தொழிலாளியின் மகள்களான 10 வயது மற்றும் 8 வயது சிறுமிகள் நேற்று முன் தினம் [புதன்கிழமை] நண்பகலில் வீட்டின் வெளியே விளைய்டிகொண்டிருந்தனர். அப்போது அதே வீட்டின் முதல் மாடியில் தங்கியிருந்த 54 வயதான அஜய் தாஸ் என்பவர் கடத்திச் சென்றுள்ளார்.
குழந்தைகளை காணாமல் நாள் முழுவதும் தேடிய பெற்றோர், மாலையில் கெத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அஜய் தாஸ் தங்கியிருந்த முதல் மாடியில் தண்ணீர் நிரப்பப்பட்ட டிரம்மில் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்த நிலையில் தலைகீழாக மிதந்தனர்.
நேற்று அதிகாலை, ராஜ்குருநகரில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள புனே நகரில் உள்ள ஒரு லாட்ஜில் மாநிலந்தை விட்டு தப்பியோட கிளம்பிக்கொண்டிருந்த அஜய் தாஸை போலீஸ் குழு கைது செய்தது.
சமையல் வேலை செய்யும் அஜய் தாஸ் கடந்த சில ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்ததால், சிறுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அவரை நன்கு அறிவார்கள். எனவே அன்றைய தினம் வெளியே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சகோதரிகளுக்கு 'லட்டு' கொடுப்பதாக கூறி தனது அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிறுமிகள் அவரது அறைக்குள் நுழைந்ததும், அவர் மூத்த சகோதரியை கழிப்பறைக்குள் தள்ளினார். இதைப் பார்த்ததும், தங்கை கத்தியதால் முதலில் அவளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பின் தண்ணீர் டிரம்மில் அவள் இறக்கும் வரை தலையை அதில் மூழ்கடித்துள்ளார்.
தங்கையின் மரணத்திற்குப் பிறகு, மூத்த சகோதரியை கழிவறைக்கு அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். ஆனால் அவளும் அலற ஆரம்பித்ததால் அதே டிரம்மில் மூழ்கடித்து கொன்றதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அஜய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுமிகளின் மரணத்துக்கு நீதி கேட்டு பெற்றோரும் உறவினர்களும் காவல் நிலையம் முன் போராட்டம் நடத்தினர்.