என் மலர்
இந்தியா

ஒரே நாளில் 2 முறை விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படை விமானங்கள்

- இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானங்கள் ஒரே நாளில் 2 முறை விபத்தில் சிக்கின.
- மேற்குவங்காளம் மற்றும் அம்பாலாவில் இந்த விபத்துகள் நடைபெற்றன.
புதுடெல்லி:
அரியானாவின் அம்பாலா பகுதியில் ஜாகுவார் ரக விமானம் இன்று காலை தொழில்நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியது. பயிற்சியின்போது நடந்த இந்தச் சம்பவத்தில் மக்கள் யாரும் வசிக்காத பாதுகாப்பான பகுதிக்குச் சென்ற விமானி விமானத்தில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் பாக்தோக்ரா விமான நிலையத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏ.என்.32 ரக போக்குவரத்து விமானம் ஒன்று இன்று விபத்தில் சிக்கியது. ரஷியாவில் தயாரிக்கப்பட்ட இந்த வகை விமானத்தில் இருந்த விமானி விபத்தில் இருந்து உயிர் தப்பினார். அவர் பாதுகாப்பாக உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
ஒரே நாளில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானங்கள் விபத்தில் சிக்குவது இது 2-வது முறையாகும்.