என் மலர்
இந்தியா
X
ஜட்டிக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய 2 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது
Byமாலை மலர்17 Dec 2024 8:39 PM IST
- ஜட்டியில் இருந்து சுமார் 931.37 கிராம் எடை கொண்ட தங்கப் பசை அடங்கிய மூன்று பைகளை பறிமுதல்.
- இந்திய சந்தையில் இதன் மதிப்பு தோராயமாக ரூ.68.93 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரியாத்தில் இருந்து வந்த இரண்டு பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனையின் போது, பயணிகளின் ஜட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை இருப்பதை கண்டு விமான நிலைய அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.
பின்னர் அவர்களின் ஜட்டியில் ரகசிய பாக்கெட்டில் இருந்து சுமார் 931.37 கிராம் எடை கொண்ட தங்கப் பசை அடங்கிய மூன்று பைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய சந்தையில் இதன் மதிப்பு தோராயமாக ரூ.68.93 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X