search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நண்பர் மோடிக்கு 21 மில்லியன் டாலர் செல்கிறது.. டிரம்ப் சொன்ன  கருத்து - கிழித்தெடுத்த காங்கிரஸ்!
    X

    நண்பர் மோடிக்கு 21 மில்லியன் டாலர் செல்கிறது.. டிரம்ப் சொன்ன கருத்து - கிழித்தெடுத்த காங்கிரஸ்!

    • 21 மில்லியன் டாலர்கள் எனது நண்பர் மோடிக்கும், இந்தியாவுக்கும் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அனுப்பப்படுகிறது என்று டிரம்ப் தெரிவித்தார்.
    • சமீபத்திய தேர்தல்களில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்த கேள்விகள் எழுத்தன. இதற்கு வெளிநாட்டு நிதி தான் காரணமா

    இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க USAID அமைப்பு மூலம் 2012 முதல் வழங்கி வருவதாக கூறப்படும் 21 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக அமெரிக்காவின் எலான் மஸ்க் தலைமையிலான DODGE(செயல்திறன்) துறை அறிவித்தது.

    இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது என்றும் யாரையோ தேர்தலில் வெற்றி பெற வைக்க முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் முயற்சி செய்துள்ளதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார்.

    மேலும் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய டிரம்ப், "21 மில்லியன் டாலர்கள் எனது நண்பர் மோடிக்கும், இந்தியாவுக்கும் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அனுப்பப்படுகிறது. பின்னர் நாங்கள் என்ன செய்வது, எங்களுக்கும் வாக்கு சதவீத அதிகரிப்பு வேண்டும் அல்லவா?" என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் பாஜக - காங்கிரஸ் ஒன்றையொன்று விமர்சித்து வருகின்றன. இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவிடம் நிதி பெறும் எந்த ஒப்பந்தமும் போடவில்லை என 2010-12 தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி மறுத்துள்ளார்.

    இதை உறுதோபடுத்தும் வகையில் "2008 ஆம் ஆண்டு முதல் தேர்தல் தொடர்பான எந்தவொரு திட்டத்திற்கும் USAID இலிருந்து இந்தியா எந்த நிதியையும் பெறவில்லை" என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி இதழ் ஒரு ஆய்வறிக்கையை நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.

    இதைத்தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரசை பாஜக விமர்சித்தது. ஆனால் அமெரிக்காவின் வாஷிங்க்டன் போஸ்ட் செய்தி இதழ் நேற்று வெளியிட்ட கட்டுரையிலும், 'DODGE வெளியிட்ட பொய்யால் இந்தியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது' அமெரிக்கா இந்தியாவுக்கு அதுபோன்ற எந்த தேர்தல் நிதியும் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த கட்டுரைகளை மேற்கோள் காட்டி மோடி மற்றும் டிரம்ப் தொடர்பை குறிப்பிட்டு காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

    நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, இது இரண்டு நண்பர்களுக்கு (மோடி - டிரம்ப்) இடையிலான விவகாரம். இந்திய தேர்தலில் அழுத்ததை ஏற்படுத்த மோடிக்கு பணம் அனுப்பியதை டிரம்ப் கூற்று நிரூபிக்கிறது. சமீபத்திய தேர்தல்களில் வாக்காளர்கள் அதிகரிப்பு குறித்த கேள்விகள் எழுத்தன.

    இதற்கு வெளிநாட்டு நிதி தான் காரணமா என்று தற்போது கேள்வி எழுகிறது. மோடியை பாஜக பிரதமர் பிம்பமாக மாற்றியது, ஆம் ஆத்மியின் திடீர் வளர்ச்சி ஆகியவை சந்தேகமளிக்கிறது.

    எந்தெந்த கட்சிகள், அமைப்புகள் இந்த நிதியை பெற்றன என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆர்எஸ்எஸ்- பாஜக வலையமைப்பு விநோதமான குற்றச்சாட்டுகளை வைக்கிறது. USAID மூலம் கடந்த 2021 மற்றும் 2024 நிதியாண்டுகளில் 650 பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கான நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Next Story
    ×