என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![உ.பி.யில் பயணிகள் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு உ.பி.யில் பயணிகள் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு](https://media.maalaimalar.com/h-upload/2024/07/18/3403262-train1.webp)
உ.பி.யில் பயணிகள் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உ.பி.யில் பயணிகள் ரெயில் இன்று திடீரென தடம் புரண்டது.
- இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்தனர் எனறும் துணை முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அங்கு 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
#WATCH | Visuals from Uttar Pradesh's Gonda, where coaches of the Dibrugarh-Chandigarh Express derailed. Rescue operation underway.
— ANI (@ANI) July 18, 2024
"One person has died in the incident, 7 injured " says Pankaj Singh, CPRO, North Eastern Railway pic.twitter.com/UyKlUsJFfx