என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![ஆந்திராவில் 1½ மாதத்தில் 4 லட்சம் கோழிகள் உயிரிழப்பு- மாதிரிகள் சோதனைக்கு அனுப்பிவைப்பு ஆந்திராவில் 1½ மாதத்தில் 4 லட்சம் கோழிகள் உயிரிழப்பு- மாதிரிகள் சோதனைக்கு அனுப்பிவைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/06/8992685-hen.webp)
X
ஆந்திராவில் 1½ மாதத்தில் 4 லட்சம் கோழிகள் உயிரிழப்பு- மாதிரிகள் சோதனைக்கு அனுப்பிவைப்பு
By
மாலை மலர்6 Feb 2025 8:21 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடந்த 45 நாட்களில் சுமார் 4 லட்சம் கோழிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- போபால் மற்றும் விஜயவாடாவில் உள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்துக்கு கோழிகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
அமராவதி:
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கோழிகள் மர்மமான நோய் பாதிப்புக்கு ஆளாகி இறந்தன. அங்கு கடந்த 45 நாட்களில் சுமார் 4 லட்சம் கோழிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, போபால் மற்றும் விஜயவாடாவில் உள்ள உயர் பாதுகாப்பு ஆய்வகத்துக்கு கோழிகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுபற்றி கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் தாமோதர் நாயுடு கூறுகையில், "பறவை காய்ச்சல் தொற்று குறித்த சந்தேகம் உள்ளது. அதை கண்டறிய மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன" என கூறினார்.
Next Story
×
X