என் மலர்
இந்தியா
X
மும்பையில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் - அலறியடித்து ஓடிய மக்கள்
Byமாலை மலர்19 Aug 2022 5:42 PM IST
- மும்பையில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
- பாழடைந்த கட்டிடம், யாரும் வசிக்கக் கூடாது என மும்பை மாநகராட்சி நோட்டிஸ் விடுத்துள்ளது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் போரிவலி (மேற்கு) பகுதியில் இன்று பிற்பகல் 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
சாய்பாபா கோவில் அருகே சாய்பாபா நகரில் உள்ள கீதாஞ்சலி கட்டிடம் மதியம் 12.34 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் பாழடைந்த கட்டிடம் என நோட்டீஸ் வழங்கப்பட்டு, யாரும் வசிக்கக் கூடாது எனக்கூறி முன்னதாகவே குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இருந்தாலும் சிலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து பெருநகர தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை வாரியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
Next Story
×
X