என் மலர்
இந்தியா
பா.ஜனதாவின் 400 என்பது ஜோக், 300 சாத்தியமற்றது, 200 கூட சவாலானது- சசி தரூர் சொல்கிறார்
- பாஜக-வுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது.
- தெற்கில் 2019-ஐ விட மிகவும் மோசமான முடிவுதான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசி தரூர் போட்டியிட்டுள்ளார். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கிறார்.
இவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
பா.ஜனதா சொல்லும் 400 இலக்கு என்பது ஜோக். 300 என்பது சாத்தியமற்றது. 200 என்பது கூட அந்த கட்சிக்கு சவாலானதாக இருக்கும்.
கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது. தெற்கில் 2019-ஐ விட மிகவும் மோசமான முடிவுதான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும். கடந்த மாதம் 26-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மூலம் 190 இடங்களில் தேர்தல் முடிந்துள்ளது. என்னுடைய தரவுகள்படி, எங்கள் கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் நேர்மறையாக முடிவு கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மிகப்பெரிய அலையாக இருக்கும் என நாங்கள் கூறவில்லை. ஆனால், அரசாங்கத்திற்கு ஆதரவாக இல்லை. தற்போது வரை நாங்கள் முன்னணியில் உள்ளோம். தேவையில்லாத இந்த நீண்ட கால தேர்தலில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் வெற்றி பெற்றால், இந்த தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும், நீண்ட காலம் இந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் என்ற பெருமையையும் பெறுவார்.