என் மலர்
இந்தியா
மகா கும்பமேளா தொடங்கியது: பக்தர்கள் புனித நீராடல்
- 12 வருடத்திற்கு ஒரு முறை மகா கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது.
- 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவார்கள்.
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
#WATCH | Prayagraj | Devotees take holy dip in Triveni Sangam - a scared confluence of rivers Ganga, Yamuna and 'mystical' Saraswati as today, January 13 - Paush Purnima marks the beginning of the 45-day-long #MahaKumbh2025 pic.twitter.com/Efe6zetUc4
— ANI (@ANI) January 13, 2025
அதில் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் புகழ்பெற்றது. அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள்.
#WATCH | Prayagraj | Devotees at the bank of Triveni Sangam - a scared confluence of rivers Ganga, Yamuna and 'mystical' Saraswati as today, January 13 - Paush Purnima marks the beginning of the 45-day-long #MahaKumbh2025 pic.twitter.com/JIOc8Oo34y
— ANI (@ANI) January 13, 2025
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா இன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு புனித நீராடி வருகிறார்கள். இந்த மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெறும்.
#WATCH | Prayagraj | A devotee from South Africa's Cape Town at #MahaKumbh2025, Nikki says, "It's very very powerful and we are very blessed to be here at river Ganga..." pic.twitter.com/Zv9d8OkQjV
— ANI (@ANI) January 13, 2025